வர்மா நின்றுபோனதை அறிந்த ஹீரோயின் அதிர்ச்சி – அதுவும் இந்த நாளிலா?

அர்ஜுன் ரெட்டி என்று தெலுங்கு படத்தின் ரீமேக் தமிழில் உருவானது. “வர்மா என்ற பெயரில் பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்திருந்தார்.

எல்லாம் முடிந்து படம் வெளியாகும் சமயத்தில் படத்தின் தயாரிப்பாளர் பாலா இயக்கிய “வர்மா” படம் எங்களுக்கு பிடிக்கவில்லை, இதனால் இப்பாததை நாங்கள் வெளியிட மாட்டோம் என்று அதிரடியாக அறிவித்தனர்.

துருவ் விக்ரமை தவிர இயக்குனர் முதல்கொண்டு அனைவரை மாற்றிவிட்டு மீண்டும் முதலிருந்த அர்ஜுன் ரெட்டி ரீமேக்கை எடுக்கவுள்ளதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

இது இப்படத்தின் ஹீரோயின் மேகா சௌத்ரிக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது, மேலும், அவருக்கு நேற்று பிறந்தநாளாம்.

அன்றைய நாளில் இப்படியான ஒரு செய்தி அவரை மிகவும் மன உளைச்சல் ஆக்கியதாக அவரே கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...