கோமதி பற்றி கேள்வி.. – மீடியாவை வெளுத்து வாங்கிய வரலட்சுமி !

varalaxmi

சென்னையில் விளையாட்டுப் போட்டியின் பிராண்ட் அம்பாஸ்டராக உள்ள நடிகை வரலட்சுமி செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையில், கோமதி குறித்து வரலட்சுமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது கோமதிக்கு எல்லோரும் உதவி செய்கிறார்கள் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

மாணவர்கள் கல்வீசி தாக்குதல் – தர்பார் படப்பிடிப்பு நிறுத்தம்!

அதற்கு சற்று யோசிக்காமல் பதில் அளித்த வரலட்சுமி, “இனிமே தான் செய்யணும். சரிஒ என்ன கேட்குறீங்களே நீங்க என்ன உதவி செஞ்சீங்க.. என்ன இன்னும் செய்யலையா? அப்புறம் ஏன் என்னை மட்டும் கேட்குறீங்க” என்று கலாய்த்துவிட்டு சென்றார்.

மேலும் இப்போதுதான் கோமதி குறித்து வெளியே தெரிகிறது. என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கும் வரலட்சுமி அதற்கும் நீங்கள்தான் காரணம். சினிமாவுக்கும், நடிகைகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று மீடியாக்களுக்கு சரமாரி பதிலடி கொடுத்தார்.

Loading...