வந்தா ராஜாவாதான் வருவேன் திரைவிமர்சனம்

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் லைகா ப்ரோடுக்ஷன்ஸ் தயாரிப்பில் இன்று (பிப்ரவரி 1) வெளியான படம் வந்தா ராஜாவாதான் வருவேன். சிம்பு நாயகனாக நடித்துள்ள இப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘அத்திரண்டிகி தாரேதி’ என்ற படத்தில் ரீமேக்காக்கும்.

சிம்புவிற்கு ஜோடியாக மெகா ஆகாஷ் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் கேத்தரின் திரேஷா,நாசர், ரம்யா கிருஷ்ணன், பிரபு, மஹத், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துளளார். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

கதை:

வெளிநாட்டில் வாழும் பணக்கார வீட்டு பிள்ளையாக வருகிறார் சிம்பு, இவரது தாத்தா நாசர் காதல் திருமணம் செய்துகொண்ட தனது மகள் ரம்யா கிருஷ்ணனை வீட்டை விடு வெளியே அனுப்புகிறார்.

இதனால் தன் பேரன் சிம்புவிடம் நீ தான் பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க வேண்டும் என்று கட்டளையிட சிம்பு தாத்தா நாசரின் விருப்பத்தை நிறைவேற்ற இந்தியா செல்கிறார். அவரை ஆசையை நிறைவேறினாரா என்பது மீதி கதை

விமர்சனம்:

துவக்கம் முதலே அசத்தலான என்ட்ரியை தந்து தனது ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறார் சிம்பு. முதல் பாதியில் கலகலப்பாக காமெடிகளுடன் செல்கிறது.

நிஜ வாழ்க்கையை சம்மதப்படுத்தி சிம்பு பேசும் வசனங்கள் அவரது ரசிகர்களிடையே கைதட்டல் கிடைக்கிறது. நடனத்தில் தனக்கே உரியதான ஸ்டைலில் கலக்கியிருக்கிறார்.

நாயகிகளாக வரும் மெகா ஆகாஷ்,கேத்ரின் தமிழ் சினிமாவிற்கே உரிய ஏமாளி ஹீரோயின்கள் மேலும் சுந்தர்.சி படத்திற்கே உண்டான கிளாமரிலும் குறை வைக்கவில்லை.

எதார்தத்தை மீறிய சண்டை காட்சிகள் சலிக்கும் வகையில் இருந்தாலும், சுந்தர்.சி படத்தில் லாஜிக் பார்ப்பது ஏற்றுகொள்ள முடியாது.வில்லன்களை காமெடியன்கள் போல் சித்தரிக்கும் முறை சுந்தர்.சி படத்தில் மட்டுமே சாத்தியம். இடைவேளைக்கு பின்பு வரும் யோகி பாபு காமெடி சிரிக்கவைக்கிறது.

படத்தின் முதல் பாகம் சற்று மெதுவாக இருந்தாலும், இரண்டாம் பாகத்தில் குறிப்பாக கிளைமாக்ஸ் சிங்கிள் ஷாட்டில் தான் ஒரு சிறந்த நடிகர் என்று நிரூபித்திருக்கிறார் சிம்பு.

ஆனால் படத்தின் சண்டைக்காட்சிகள் அநியாயத்திற்கு ஏதோ ரப்பர் பால் போல அடித்து பறக்க விடுகின்றனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்பு ஃபேமிலி ஆடியன்சிர்காக ஒரு படத்தில் நடித்துள்ளார்.

மொத்தத்தில் “வந்தா ராஜாவாதான் வருவேன்” சலிப்பு!

RATING: 2.5/5

Suggestions For You

Loading...