“வந்தா ராஜாவா தான் வருவேன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்!

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு, மஹத், மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் வந்தா ராஜாவா தான் வருவேன்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் கூறினர். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

இப்படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று ஒரு பாடல் வெளியாகி ரசிக்கும்படி இருந்தது.

தற்போது இப்படம் சென்சாருக்கு சென்று U சான்றிதழ் பெற்றுள்ளது. சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 1ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இந்த அதிகாரபூர்வ தகவல் சற்றுமுன் வெளியானது.

Suggestions For You

Loading...