வந்தா ராஜாவாதான் வருவேன் முதல் நாள் வசூல் – ரசிகர்கள் அதிர்ச்சி!

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்து நேற்று வெளியான படம் “வந்தா ராஜாவாதான் வருவேன்”. கமெர்ஷியல் காமெடி படமாக அமைத்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கவலையான விமர்சங்களை சந்தித்து வருகிறது.

சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த இப்படம் அவர்களுக்கு மட்டும் கொஞ்சம் திருப்தி அளித்துள்ளது.

இந்நிலையில் இப்படம் சென்னையில் ரூ 43 லட்சம் தான் வசூல் செய்துள்ளதாம், பலரும் எப்படியும் ரூ 80 லட்சம் வரை வசூல் வரும் என்று எதிர்ப்பார்த்தார்கள். இது சிம்பு ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

விஸ்வாசம், பேட்ட போன்ற படங்கள் இன்னமும் நன்றாக ஓடிவருவதால் சிம்பு படத்திற்கு கொஞ்சம் பாதிப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...