பேய் மாமாவாக வடிவேலு – வைரலாகும் புதுப்பட போஸ்டர்!

முன்பெல்லாம் வடிவேலுவிடம் கால்ஷீட் வாங்குவது ஹீரோக்களிடம் வாங்குவது போன்றது. ஆனால எப்போது அரசியல் சர்ச்சைகளில் சிக்கினாரோ அப்போதிலுருந்து சினிமாவிற்கு இடைவேளை விட்டிருந்தார்.

பின்னர் கத்தி சண்டை, சிவலிங்கா, மெர்சல் படத்தில் நடித்திருந்தார். இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் நடிக்க ஆரம்பித்த வடிவேலு பின்பு நடந்த சில பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வடிவேலு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ‘பேய் மாமா’ என்ற இப்படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்கவுள்ளார். சக்தி சிதம்பரம் லவ்லி, சார்லி சாப்ளின் , இங்கிலிஸ்காரன் உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது இதன் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது

Suggestions For You

Loading...