உறியடி 2 திரை விமர்சனம்

uriyadi 2 review

படம்: உறியடி 2 | நடிகர்கள்: விஜய் குமார், சுதாகர், ஷங்கர் தாஸ் | இசை” கோவிந்த் வசந்தா | தயாரிப்பு: சூர்யா | எழுத்து & இயக்கம்: விஜய் குமார்

கதை:

பல நாடுகளால் தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்து தயாரிக்கும் ஆலையை தமிழகத்தில் ஒரு கிராமத்தில் தொடங்குகிறார்கள். அரசியல்வாதிகள், அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு ஆலையை தொடங்க அனுமதி அளிக்கின்றனர்.

அந்த ஆலை சரியாக பராமரிக்கப்படாததால் விஷவாயு பரவி சுற்றுப் புற கிராமங்கள் மக்கள் சந்திக்கும் பிரச்சனை அதிலிருந்து மீண்டு வந்தார்களா இல்லையா என்பது தான் இப்படத்தின் மீதி கதை.

விமர்சனம்:

விஜய் குமார் இயக்கிய நடித்த உறியடி படம் சாதி அரசியல் பற்றி பேசியது சமூகத்தில் மிக பெரிய தாக்கத்தை உருவாக்கியது. அப்படத்திற்கு கிடைத்த வெற்றி உறியடி 2 படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்த்தது.

உரியடி 2 படத்தில் விஜய் குமார் அவருடன் youtube பிரபலம் சுதாகர் மேலும் ஒரு புதுமுகம் மூவரும் அந்த ஆலையில் வேலைக்கு செல்கிறார்கள். அப்போது ஒருவர் ஆலையில் வெளியான விஷவாயு தாக்கி மரணமடைகிறார்.

அப்போதுதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. தனது சுயநலத்திற்காக ஆலையை பராமரிப்பு செய்யாமல் இருக்கும் அந்த வெளிநாட்டு முதலாளிக்கு எதிராக போராடுகிறார் விஜய்.

இதற்கிடையே அந்த ஊரில் இருக்கும் சாதி கட்சி அரசியல் லாபத்திற்காக மக்கள் இடையே கலவரத்தை தூண்டிவிட்டு செய்யும் மோசமான செயல்கள் தோலுரித்து காட்டியுள்ளார்.

கம்யூனிச கருத்துக்கள் தூக்களாக இருப்பதால் படம் முழுக்க ஒரே சிகப்பு வண்ணமாக தெரிகிறது. தேர்தல் நேரத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தில், “ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது. அரசியல்ல நாம தலையிடலன்னா… அரசியல் நம்ம வாழ்க்கையில தலையிட்டுரும். கடவுள் கிட்ட நிஜமா இருனு வேண்டிக்கிறேன்.” உள்ளிட்ட வசனங்கள் ரசிகர்களை ஆர்பரிக்க வைப்பதாக உள்ளன.

96 பட இசையமைப்பாளரின் இசை மிகவும் பக்கபமாக அமைந்துளளது. உறியடி படத்தை போல இந்த படத்திற்கும் அதிரடியான கிளைமாக்ஸ் கட்சியுடன் முடித்துள்ளார்.

மொத்தத்தில் யாருக்கு வாக்களிப்பது என்பது பார்த்து வாக்களிக்கவேண்டும் என்பதை அழுத்தமான கூறியுள்ள இயக்குனர் விஜய் குமார். மேலும் அரசியல்வாதிகள் தான் மக்களின் தலையெழுத்தை மாற்றுகிறார்கள் என்ற உண்மை தகவல் பதிவுசெய்துள்ளார்.

RATING 2.75/5

Suggestions For You

Loading...