தானோஸ் என்று Google செய்து பாருங்க… – செம விஷயம் காத்திருக்கிறது!

thanos

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் இன்று இந்தியாவில் மிகப்பிரமாண்டமாக வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு இந்தியப்படங்களை விட மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் தானோஸ் என்ற கதாபாத்திரம் தான் வில்லன், தானோஸ் ஒரு சொடக்கு போட்டு உலகத்தில் உள்ள பாதி மக்களை அழித்துவிடுவான்.

இந்த பாகத்தில் அதை சூப்பர் ஹீரோக்கள் மீட்டு வருவார்கள், தற்போது கூகுளில் தானோஸ் என்று டைம் செய்தால் ஓரத்தில் ஒரு கை இருக்கும்.

அதை க்ளிக் செய்தால், கூகுள் தகவல்கள் மறையத்தொடங்குகிறது, பிறகு மீண்டும் க்ளிக் செய்தால், தகவல்கள் வருகிறது. நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

Loading...