அஜித்திற்கு இருக்கும் நேர்மை விஜய்க்கு இல்லாதது ஏன்? உதவி இயக்குனர் கேள்வி!

vijay-ajith

தமிழ் சினிமாவில் கதை திருட்டு என்பது சமீப காலமாக நிறையா நடந்து வருகிறது. இது தமிழ் சினிமாவில் விழுந்த ஒரு கருப்பு புள்ளி என்றே கூறலாம்.

இது தொடர்ந்து விஜய் படங்களில் இது நடந்து வருவது மிகவும் வருத்தம் தான், அதிலும் சர்கார் படத்தில் வெளிப்படையாக மாட்டிக்கொண்டது ரசிகர்கள் மத்தியில் மிக பெரியா சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . இந்நிலையில் தளபதி-63 கதை என்னுடையது என உதவி இயக்குனர் செல்வா கூறியது அனைவரும் அறிந்ததே.

அவர் சமீபத்தில் இதுக்குறித்து பேசுகையில் ‘நான் அஜித், விஜய் என்றெல்லாம் பிரித்து பேசவில்லை.

ஆனால், அஜித் சார் பில்லா என்ற படத்தை எடுத்தார், அவர் நினைத்திருந்தால், ரைட்ஸ் வாங்காமல், அப்படியே எடுத்துவிட்டு, வேறு ஒரு டைட்டிலில் ரிலிஸ் செய்யலாம்.

அந்த நேர்மை ஏன் இவர்களிடம் இல்லை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று அனைத்திலும் உங்கள் பெயர் வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்’ என்று கடுமையாக பேசியுள்ளார்.

Suggestions For You

Loading...