தளபதி 63 கதை திருட்டு புகாரில் திடீர் திருப்பம்!

atlee-vijay2

நடிகர் விஜய் படங்கள் என்றால் ஏதாவது சர்ச்சை இருக்கும் அது அவருக்கே பழகிவிட்டது. கடைசியக வந்த சர்கார் படம் கூட கதை சர்ச்சை வெடித்தது அனைவரும் அறிந்தது.

தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தில் கூட அதே சர்ச்சை உருவாகியுள்ளது. குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா தளபதி 63 படத்தின் கதை என்னுடையது என எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் அவர் சங்கத்தில் சேர்ந்து இன்னும் 6 மாதம் ஆகவில்லை என கூறி எழுத்தாளர் சங்கம் அவரது புகாரை நிராகரித்துளளது. இதுபற்றி நீதிமன்றத்தை அணுகியுள்ளார் கே.பி.செல்வா. நீதிமன்றம் தற்போது தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்தகட்ட விசாரணை 23ம் தேதி நடைபெறவுள்ளது.

Suggestions For You

Loading...