தளபதி 63 கதை என்னுடையது – அட்லீ மீது புகார் கொடுத்த இயக்குனர்!

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் இப்படத்தில் விஜய் கால்பந்து விளையாட்டு வீரராக நடிக்கிறார்.

இதற்காக பலகோடி செலவில் கால்பந்து விளையாட்டு மைதான செட் போட்டு படத்தை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கதை நான் இயக்கிய குறும்படத்தில் இருந்து எடுத்துள்ளனர் என ஒரு இயக்குனர் குற்றம்சாட்டியுள்ளார்.

சிவா என்ற குறும்பட இயக்குனர் தான் பெண்கள் கால்பந்து மையமாக வைத்து எடுத்த குறும்படத்தை வைத்து தான் இப்படம் கதை உருவாக்கியுள்ளார் என தெரிவித்து வருகிறார்.

தமிழ் எழுத்தாளர் சங்கம் மற்றும் நீதிமன்றத்திலும் இதுபற்றி புகார் அளிக்கவுள்ளாராம். படத்தில் இருந்து ஒரு புகைப்படம் கூட வெளியாகாத நிலையில் இப்படியொரு புகார் வந்துள்ளது எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும் என்பது தெரியவில்லை.

Suggestions For You

Loading...