தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி இதோ!

தெறி, மெர்சல் ஆகிய படங்களை அடுத்து அட்லி, விஜய் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள படம் தளபதி 63.

தளபதி 63 படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க காமெடிக்கு விவேக், யோகி பாபு ஆகியோர் நடிக்கிறார்கள். அதனால் காமெடிக்கு குறைவே இருக்காது என்று கூறலாம்.

மேலும் பரியேறும் பெருமாள் படம் புகழ் கதிர், ரோபோ ஷங்கரின் மகளும் இந்த படத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படடப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்துவருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

Suggestions For You

Loading...