ஜெயலலிதா இல்லாத தைரியத்தில் தலைவா இரண்டாம் பாகம் உருவாகிறதா?

தளபதி விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்களை கொண்டவர். இவர் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தளபதி-63 பிரமாண்டமாக உருவாகி வருகின்றது.

இந்நிலையில் விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் தலைவா, இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார், பல பிரச்சனைகளை கடந்து தான் இப்படம் தமிழகத்தில் ரிலிஸானது.

தலைவா தலைப்பின் கீழே Time to lead என்ற வார்த்தை போட்டதால் அப்போது இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அந்த படத்திற்கு நிறைய இடையூறு கொடுத்ததாக கூறப்பட்டது. அப்படி பல தடைகளை தாண்டி வந்தும் தோல்வியை சந்தித்தது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க விஜய் முடிவு செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி கசிந்து வருகின்றது, இப்படம் தோல்வி என்றாலும், விஜய் ரசிகர்களின் பேவரட் படம் என்பதால் கண்டிப்பாக இரண்டாம் பாகம் வந்தால் எதிர்ப்பார்ப்பு இருக்கும் என கூறப்படுகின்றது.

ஜெயலலிதா இல்லாத இந்த நேரத்தில் இந்த தைரியம் வந்ததா? என்று சில குரூப் கேள்வியை எழுப்பியுள்ளது.

Suggestions For You

Loading...