முடிவுக்கு வரும் தல 59 – அடுத்தகட்ட ரிலீஸ் இதுதான்!

தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வருகிறார். அஜித்தின் 59வது படமான இதை போனி கபூர் தயாரிக்க படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் அஜித் சம்மந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டது, அஜித் கூட நீதிமன்றம் சம்மந்தமான காட்சியில் 10 நிமிடம் ஒரே டேக்கில் நடித்து அசத்தியுள்ளார் என்ற செய்திகள் வந்தது.

தற்போது இப்படத்தின் 85% முடிந்துவிட்டதாக கூறப்படுகின்றது, எப்படியும் இன்னும் இரண்டு வாரத்தில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என தெரிகின்றது.

ஏப்ரல் மாதத்தில் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகும் எனவும், சொன்னது போல் மே 1 இப்படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Suggestions For You

Loading...