தல 59 திரைக்கதையில் மாற்றம் – வெளியாக செம அப்டேட்ஸ்!

அஜித் அடுத்தாக வினோத் இயக்கத்தில் பிங்க் ரீமேக் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது அறிந்ததே. ஹிந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸீ நடித்து வெளியான பிங்க் படம் இந்திய முழுவதும் பேசப்பட்டது.

அப்போது இருந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூட இந்த படத்தை பாராட்டினார். பெண்களில் பாதுகாப்பு பற்றி பேசும் படமாக இது அமைத்திருக்கும்.

இந்த மாதிரி கதையில் அஜித் நடிப்பது மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களில் தொடஙவுள்ள நிலையில் படத்தை பற்றி சில தகவல்கள் வந்துள்ளது.

அஜித்திற்கு ஜோடியாக ஹிந்தி நடிகை வித்யா பாலன் நடிக்கவுள்ளார், இவர் 6 நாட்கள் கால்ஷிட் கொடுத்துள்ளாராம்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் 4 பாடல்கள் உள்ளதால், இதில் ஒரு பாடல் 3 பெண்களுக்கான பாடலாம். 1 பாடல் அஜித், வித்யா பாலனுக்கும், மற்ற 2 பாடல்கள் மாண்டேஜாக வரும் என கூறியுள்ளனர்.

ஆனால், ஹிந்தி பிங்கில் 2 பாடல்கள் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் அமிதாப் அவருடைய மனைவிக்கெல்லாம் பாடலே இல்லை. இதனால் திரைக்கதையில் சில மாற்றங்கள் இருக்கும் என தெரிகிறது.

Loading...