அஜித் கலந்துகொள்ளும் “தல 59” படப்பிடிப்பு எப்போது எங்கே தெரியுமா?

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் பூஜா சில நாட்கள் முன்பு போடப்பட்டது.

ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த பிங்க படத்தின் ரீமேக் படமான இப்படத்தை வினோத் இயக்குகிறார். இப்படத்தின் அஜித்துடன் வித்யாபாலன், ஷ்ரதா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இப்போது இந்த புதிய படப்பிடிப்பில் அஜித் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து கலந்துகொள்ள இருக்கிறாராம். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் தான் படப்பிடிப்பு நடக்கிறதாம்.

விரைவில் இப்படம் முடிவடைந்து அஜித்தின் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி திரைக்குவரவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

Suggestions For You

Loading...