அமோக வரவேற்பு பெற்ற தடம் – மூன்று நாள் வசூல் விவரம் இதோ!

நடிகர் அருண் விஜய் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியான படம் தடம். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தடையற தாக்க படத்திற்கு பிறகு மீண்டும் இணையும் இந்த கூட்டணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது.

சூப்பரான கதையில் பக்காவான திரில்லர் படமாக வெளியான இப்படத்திற்கு மக்கள் அமோக ஆதரவு கொடுத்துள்ளார்கள்.

3 நாள் முடிவில் சென்னையில் மட்டும் இப்படம் ரூ. 92 லட்சம் வசூலித்துள்ளது. அருண் விஜய் படங்களில் இது தான் அதிகம் என குறிப்பிடத்தக்கது.

Loading...