அருண் விஜய் கேரியரில் மிக பெரிய வெற்றி பெற்ற ‘தடம்’ மொத்தம் வசூல் என்ன தெரியுமா?

thadam

அருண் விஜய் நீண்ட வருட போராட்டங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து சிறந்த நடிகர் என்ற பெயரை வாங்கியுள்ளார்.

தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்துள்ளார். இவ்வளவு, ஏன், மணிரத்னம் இயக்கத்தில் வந்த செக்க சிவந்த வானம் படத்தில் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார். அதுமட்டும் இல்லாமல் ஹீரோவாக இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் நல்ல விமர்சனங்களுடன் வெற்றி பெற்று வருகிறது.

விஜய்க்கு அம்மாவாக நடிக்காதது எனக்கு பெரிய குறை.. பிரபல நடிகை வருத்தம்

இந்த நிலையில், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்த படம் தடம். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக தன்யா ஹோப் மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகிய இருவரும் நடித்திருந்தனர்.

கடந்த மார்ச் 1ம் தேதி திரைக்கு வந்த இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 50 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் ஹிட் கொடுத்தது. இப்படத்தின் வெற்றியை திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்து வழிபட்டார். மேலும், கிரிவலமும் சுற்றியுள்ளார்.

இந்த நிலையில், இப்படம் வெளியாகி 60 நாட்களுக்கு மேல் ஆன நிலையில், தமிழகத்தில் மட்டும் ரூ.21.50 கோடி வசூல் குவித்துள்ளது. மேலும், கர்நாடகாவில் ரூ.1.17 கோடியும், கேரளாவில் ரூ.1.10 கோடியும், உலகம் முழுவதும் ரூ.4.05 கோடியும் வசூல் குவித்துள்ளது.

Suggestions For You

Loading...