அஜித்திடம் பல்ப் வாங்கிய பிறகு சமாளிக்கும் தமிழிசை – புதிய பேட்டி!

நேற்று முன்தினம் திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்தர்ராஜன் தலைமையில் பா.ஜ.க வில் அஜித் ரசிகர்கள் 100 பேர் இணைந்தார்கள் என்று செய்தி வந்தது.

இதை தொடர்ந்து, தமிழிசை சவுந்தர்ராஜன், அஜித்தையும், அஜித் ரசிகர்களையும் நேர்மையானவர்கள் என்று பாராட்டிப் பேசியிருந்தார். இதனால் அஜித்துக்கு பாஜக அழைப்பு என்று தகவல்கள் வெளியாகின.

இந்த செய்தியால் கடுப்பான அஜித் உடனடியாக அறிக்கை ஒன்றை விட்டார்.” எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல்‌ ஈடுபாட்டில்‌ எந்த ஆர்வமும்‌ இல்லை. நான்‌ சினிமாவில்‌ தொழில்‌ முறையாக வந்தவன்‌. நான்‌ அரசியல்‌ செய்யவோ, மற்றவர்களுடன்‌ மோதவோ இங்கு வரவில்லை. என்‌ ரசிகர்களுக்கும்‌ அதையேதான்‌ நான்‌ வலியுறுத்திகிறேன்‌. அரசியல்‌ சார்ந்த எந்த ஒரு வெளிப்பாட்டை நான்‌ தெரிவிப்பதில்லை. என்‌ ரசிகர்களும்‌ அவ்வாறே இருக்க வேண்டும்‌ என விரும்புகிறேன்‌” எனக் குறிப்பிட்டிருந்தார்.

தமிழிசை மற்றும் பா.ஜ.க பெயரை தனது அறிக்கையில் அஜித் குறிப்பிடவில்லை என்றாலும் அவரை தான் குறிப்பிட்டு சொல்கிறார் என்று வெளிப்படையாக தெரிந்தது.

இது குறித்து தமிழிசை இன்று பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது,

“நடிகர் அஜித்தை பாஜகவுக்கு அழைக்கவில்லை. திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் தங்களை அஜித் ரசிகர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்ட 2000-க்கும் மேற்பட்டவர்கள் பாஜகவில் இணைந்தனர்.

அஜித் அறிக்கை தமிழிசைக்கு பதிலடி என்று சொல்லப்படுகிறது. அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. இது எனக்கான பதிலடியெல்லாம் இல்லை. நாங்கள் அஜித்தை அழைக்கவும் இல்லை.

நான் ஒரு மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய அஜித் உதவி செய்தார். அப்படிப்பட்ட நல்ல மனிதர் அவர். அதனால், அவரையும் அவரது ரசிகர்களையும் நான் பாராட்டினேன்.” என்று கூறினார்.

ஆனால் நேற்று இவர் குழந்தை அறுவைசி கிச்சை விஷயத்தை குறித்து பேசவே இல்லை என்பது தான் உண்மை

Suggestions For You

Loading...