உறியடி 2 திரை விமர்சனம்

uriyadi 2 review

படம்: உறியடி 2 | நடிகர்கள்: விஜய் குமார், சுதாகர், ஷங்கர் தாஸ் | இசை” கோவிந்த் வசந்தா | தயாரிப்பு: சூர்யா | எழுத்து & இயக்கம்: விஜய் குமார் கதை: பல நாடுகளால் தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்து தயாரிக்கும் ஆலையை தமிழகத்தில் ஒரு கிராமத்தில் தொடங்குகிறார்கள். அரசியல்வாதிகள், அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு ஆலையை தொடங்க அனுமதி அளிக்கின்றனர். அந்த ஆலை சரியாக பராமரிக்கப்படாததால் விஷவாயு பரவி சுற்றுப் புற கிராமங்கள் மக்கள் சந்திக்கும் பிரச்சனை அதிலிருந்து மீண்டு வந்தார்களா இல்லையா என்பது தான் இப்படத்தின் மீதி கதை. விமர்சனம்: விஜய் குமார் இயக்கிய நடித்த உறியடி படம் சாதி அரசியல் பற்றி பேசியது சமூகத்தில் மிக பெரிய தாக்கத்தை உருவாக்கியது. அப்படத்திற்கு கிடைத்த வெற்றி உறியடி 2 படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்த்தது.…

Read More

காப்பான் படத்திற்கு பிறகு உறியடி இயக்குனருடன் இணைந்த சூர்யா!

சூர்யா நடிப்பில் அடுத்ததாக NGK படம் வெளியாகவுள்ளது. செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கிவரும் காப்பான் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. மோகன்லால், ஆர்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்குப் பிறகு, ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இது அவருடைய 38-வது படமாகும். ஜீ.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஏற்கெனவே பாடல்கள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார் ஜீ.வி.பிரகாஷ். இந்நிலையில், இந்தப் படத்துக்கு ‘உறியடி’ படத்தின் இயக்குநர் விஜய் குமார் வசனம் எழுதியிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. விஜய் குமார் இயக்கி, நடித்து வெளியான ‘உறியடி’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே, ‘உறியடி’ இரண்டாம் பாகத்தை தன்னுடைய 2டி என்டெர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Suggestions For You…

Read More

எதிர்பார்ப்பில் இருக்கும் உறியடி 2 படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் உறியடி. இப்படத்தை இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்திருந்தார். அதிரடியான அரசியல் களத்தில் உருவான இப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்தப் படத்தின் 2-ம் பாகம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. உறியடி 2 படத்தை விஜய்குமாரே இயக்கி நாயகனாகவும் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கேரளாவைச் சேர்ந்த விஸ்மயா நடித்திருக்கிறார். 96 பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமையாகிறார். சமீபத்தில் இப்படத்தில் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் உறியடி 2 படம் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு வருகிறார்களாம். விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Suggestions For You…

Read More