தல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம் !

தல அஜித் தமிழகமே கொண்டாடும் மிக பெரிய நடிகர், அவர் சினிமா மட்டும் இல்லாமல் பல்வேறு விஷயங்களில் கூட சாதனை படைத்துள்ளார். தற்போது அவருடைய கவனம் சினிமாவை தாண்டி துப்பாக்கி சுடும் போட்டியில் இருக்கிறது, தமிழ்நாட்டில் அவர் துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு ஜெயித்துள்ளார். சிறிது நாட்கள் முன்னாள் டெல்லியில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டி ஒன்றில் தல அஜித் பங்கேற்றுள்ளார், அதில் அவர் டாப் 10 இடங்களில் 9வது இடத்தை பிடித்துள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வர ரசிகர்கள் அனைவரும் கொண்டாடிவருகின்றனர் . Suggestions For You அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உ… தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… கவினை அறைந்ததற்கு இதுதான் காரணம்-உண்மையை உடைத்த நண… அதுக்குள்ள இவ்வளவு வியாபாரம்…

Read More

அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உடைத்த பிரபலம்!

தல அஜித் தமிழகமே கொண்டாடும் ஒரு மிக பெரிய நடிகர் இவரைப்பற்றி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அஜித் ரசிகர்கள் மிகவும் வித்யாசமானவர்கள் அவர்கள் அஜித் மேல் வைத்திருக்கும் பாசத்தை போல் நான் வேறு எங்கும் பார்த்தது இல்லை. அவர் ஆசிர்வதிக்கப்பட்ட நடிகர் என்றும் , அவருக்கு இருப்பது ரசிகர்கள் கிடையாது அவரின் வெறியர்கள் என்றே சொல்லலாம். ஒரு நடிகரின் படம் பெரிய அளவில் போக வில்லை என்றால் அவரது ரசிகர்கள் கோபப்படுவார்கள், ஆனால் அஜித்தின் ரசிகர்கள் அவர் திரையரங்கில் வந்து நின்னாள் மட்டும் போதும் என்றும், அவர் எது செய்தாலும் ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்று பெருமையாக கூறியுள்ளார். Suggestions For You தல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்ட… விஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார……

Read More

தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளிவரவுள்ளது, ரசிகர்கள் அனைவரும் மிக பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர், தற்போது படத்தின் புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தலயின் அடுத்த படத்தில் போனி கபூர் யின் மகன் அர்ஜுன் கபூர் வில்லனாக நடிக்கவுள்ளார் என பரவலாக பேச்சு வார்த்தை போய்க்கொண்டு இருக்கிறது, இந்த படத்தையும் வினோத் தான் இயக்கவுள்ளார் கூடிய விரைவில் அதிகார பூர்வமான தகவல் வெளி ஆகும் என எதிர் பார்க்கலாம். Suggestions For You தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்க… கோவப்பட்ட அஜித், வியாபாரம் ஆகாத நேர்கொண்ட பார்வை-உ… தல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்ட… அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உ… அதுக்குள்ள இவ்வளவு வியாபாரம் செய்ததா அஜித்தின் நேர… அஜித்திற்கு…

Read More

அஜித்தின் புதிய கெட் அப் – 60வது படத்திற்காக மாஸ் லுக்!

அஜித் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றி பெற்ற பிங்க் படத்தின் தமிழ் பதிப்பாக தயாராகி உள்ளது. இதில் வித்யாபாலன் ஜோடியாக வருகிறார். வினோத் இயக்கியுள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார். இந்நிலையில் அஜித்தின் அடுத்தப்படத்தையும் வினோத் தான் இயக்கவுள்ளாராம், இப்படத்தில் அஜித் புதிய கெட்டப்பில் தோன்றவுள்ளாராம். அதில் மீசை தாடி இல்லாமல் யங் கெட்டப் ஒன்று இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது, மேலும், புதிய ஹேர் ஸ்டைல் ஒன்றையும் இப்படத்திற்காக தல வைக்க உள்ளாராம். Suggestions For You தல 60 படம் குறித்து மரண மாஸ் அப்டேட்டை விட்ட தயாரி… சமூக பிரச்னையை பேசும் தல அஜித் – அடுத்த படத்… ஜிம்மில் ‘தல’ – அடுத்த படத்திற்க… முதலில் பிடிக்கவில்லை – அஜித்திடம் ஓகே வாங்க… ‘தல…

Read More

தல 60 படம் குறித்து மரண மாஸ் அப்டேட்டை விட்ட தயாரிப்பாளர் போனி கபூர்!

ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்படுபவர் அஜித். இவருக்கு நடிப்பதை தாண்டி பைக், கார் ரேஷ், சமையல், போட்டோ கிராபி என பல திறமைகளுக்கு சொந்தக்காரராவார். போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன் உள்ளிட்டோர் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை அடுத்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் நடிக்கிறார். அதையும் போனி கபூர் தான் தயாரிக்கவுள்ளார். தற்போது போனி கபூர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில், அஜித்திற்கு விளையாட்டு மற்றும் ரேஸிங்கில் ஆர்வம் இருப்பதை அரிந்து சந்தோஷப்பட்டேன், தல 60வது படமும் வேகத்தை மையப்படுத்திய ஒரு திரில்லர் படம் என்று கூறியுள்ளார். அஜித்தின் அடுத்த படத்தில் ரேஸ் குறித்த காட்சிகள் இருக்கும் என்பது தல ரசிகர்களின் எதிர்பார்ப்பாக…

Read More

சமூக பிரச்னையை பேசும் தல அஜித் – அடுத்த படத்தின் சுவாரசிய தகவல்!

தல அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்ட நடிகர். இவர் படம் வருகின்றது என்றாலே திரையரங்குகள் திருவிழா போல் இருக்கும். அஜித் நடிப்பில் அடுத்ததாக ‘நேர்கொண்ட பார்வை’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தை தொடந்து அஜித்தின் அடுத்த படத்தையும் போனி கபூர் தயாரிக்க வினோத் இயக்கவுள்ளார். பெரிய பட்ஜெட் படமாக உருவாகியுள்ள இப்படம் அடுத்த வருடம் கோடையில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்காக வினோத் அஜித்திடம் இரண்டு கதைகள் கூறியுள்ளார். அரசியல் கதை ஒன்று மற்றோன்று சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கிய பிரச்னையை பேசும் கதை என இரண்டு கதையை கூறியுள்ளார். அரசியல் கதையை தவிர்த்த அஜித் சமூக பிரச்சனை பேசும் கதையை தேர்வுசெய்துள்ளார். இந்த கதை தற்போது சமூகத்தில் நடக்கும் முக்கியமான…

Read More

ஜிம்மில் ‘தல’ – அடுத்த படத்திற்கு ரெடியாகும் அஜித்!

ajith

விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து தல அஜித் தனது 59ஆவது படமான நேர்கொண்ட பார்வை படத்தில் ரொம்பவே பிஸியாக இருக்கிறார். இப்படம் வரும் ஆக்ஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இயக்குனர் வினோத் இப்படத்தை இயக்கியுள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித்தின் 60-வது படத்தையும் இயக்குநர் வினோத் இயக்க உள்ளார். என்ன பிரச்னை வந்தாலும் விஜய் தேவர்கொண்டாவிற்கு முன்பு நம்ப இதை பண்ணனும் – சிவகார்த்திகேயன் அதிரடி! இப்படத்திற்காக அஜித் தனது உடல் எடையை குறைத்துவருகிறார், இதனால் தினமும் ஜிம்மில் உடல்பயிற்சி செய்துவருகிறார். அதிரடி ஆக்க்ஷன் படமாக உருவாகவுள்ள இதில் இளமையான தோற்றத்தில் வருவார் என கூறப்படுகிறது. Suggestions For You தல 60 படம் குறித்து…

Read More

முதலில் பிடிக்கவில்லை – அஜித்திடம் ஓகே வாங்க வினோத் பட்ட கஷ்டம்!

போனிக் கபூர் தயாரிப்பில், நடிகர் அஜித் நடிக்கும், பிங்க் பட தழுவலான நேர்கொண்ட பார்வை படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில், நடிகர் அஜித்துடன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், வித்யா பாலன், ஷரத்தா ஸ்ரீநாத், அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தில், நடிகர் அஜித்துக்காக வழக்கறிஞர் கேரக்டர் உருவாக்கப்பட்டு, அதை பிரமாதமாக படமாக்கி இருப்பதாக படம் குறித்து வினோத் குறிப்பிட்டிருக்கிறார். தற்போது இந்த படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் தான் அஜித் மீண்டும் நடிப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தில் அஜித்திற்கு 60வது படமாகும். இதற்கு இடையில் பல விஷயங்கள் நடந்துள்ளது, அதாவது அஜித்திற்கு வினோத் முன்பு சொன்ன கதையில் திருப்தி இல்லையாம். ஆனால், போனிகபூர் கேட்டதால், வினோத் மீண்டும் வேறு கதையை ரெடி செய்து கொடுக்க, அஜித்திற்கு மிகவும் பிடித்துவிட்டதாம்,…

Read More

‘தல 60’ படத்தில் அஜித் லுக் இது தானா? உடல் எடையை குறைத்த தல!

ajith

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வய் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அணைத்து முடிந்த நிலையில் அடுத்தகட்ட பணியை தொடங்கியுள்ளார்கள். இந்நிலையில் அஜித் லேட்டஸ்ட் புகைப்படம் என்று ஒன்று இணையத்தில் வெளிவந்துள்ளது. தல அதில் தன் எடையை பாதியாக குறைத்து கிரீடம் படத்தில் இருந்தது போல் மாறிவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர் அஜித்தின் அடுத்த படமான தனது 60வது படத்தின் லுக் இதுவாக இருக்கலாம் என்று கூறபடுகிறது. அந்த படத்தையும் வினோத் தான் இயக்கவுள்ளார் எனது குறிப்பிடத்தக்கது. Suggestions For You அஜித்தின் புதிய கெட் அப் – 60வது படத்திற்காக… தல 60 படம் குறித்து மரண மாஸ் அப்டேட்டை விட்ட தயாரி… சமூக பிரச்னையை பேசும் தல அஜித் – அடுத்த படத்… ஜிம்மில் ‘தல’ – அடுத்த படத்திற்க… முதலில் பிடிக்கவில்லை…

Read More

அஜித் 60வது படத்தின் இசையமைப்பாளர் இவரா? உறுதிசெய்த புகைப்படம்?

thala ajith

வினோத இயக்கத்தில் அஜித் நடித்துவரும் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. அஜித் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பேசும் படத்தில் அஜித் நடிப்பது அனைவரது எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது. அதுவும் அஜித் போன்ற பெரிய நடிகர் இது பற்றி பேசுவது கண்டிப்பாக கவனிக்கப்படும் என்று ஒரு நம்பிக்கை. இப்படத்தை தொடர்ந்து தனது 60வது படத்தையும் வினோத்திற்கே இயக்கும் வாய்ப்பை தல கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சிம்பு அடுத்து தேர்ந்தெடுக்கப்போகும் இயக்குனர் யார்? இரண்டு இயக்குனர்கள் போட்டி! அடுத்தக்கட்டமாக வரும் செய்தி என்னவென்றால் அஜித்தின் 60வது படத்திற்கு ஜிப்ரான் இசை என்கின்றனர். ஏற்கெனவே ஜிப்ரான் அஜித்துடன் எடுத்த புகைப்படம் போட்டு நாம் ஒரு நாள் பணிபுரிவோம் என்று அஜித் கூறியதாக பதிவு செய்திருந்தது…

Read More