அஜித் வார்த்தையை மதிக்காத அவரது ரசிகர்கள் – இப்படியா செய்வது?

தினம்தோறும் சமூக வலைத்தளங்களில் நடந்து வரும் ரசிகர்களின் சண்டை பற்றி நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலரில் அஜித் ஒரு வசனம் பேசியிருப்பார். ‘ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்றதுக்காக இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறீங்க’ என அஜித் பேசியிருப்பார். ஒரு நடிகரின் ரசிகர்கள் மற்ற நடிகர்களை அசிங்கப்படுத்தும் விதமாக இருக்கக்கூடாது என்பதை தான் அஜித் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்திருப்பார். ஆனால் அவர் சொன்னதையும் சில ரசிகர்கள் கேட்கும் நிலையில் இல்லை. நேற்று விஜய் பற்றி மிக மோசமாக தேசிய அளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர். #June22VijayDeathDay அவர்கள் ட்ரெண்ட் செய்துள்ளனர். நாளை மறுநாள் விஜய் பிறந்தநாள் வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் செய்துள்ள இந்த செயல் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. மறுபுறம் விஜய் ரசிகர்கள் #LongliveAjith என ட்ரெண்ட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. Suggestions For You உலக…

Read More

தளபதி 63 படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் கசிந்தது!

நயன்தாரா தொடர்ந்து சோலோ ஹீரோயினாக படங்கள் நடித்து வந்தாலும், இடையிடையே டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் சில படங்கள் நடிக்கிறார். ரஜினியின் தர்பார் மற்றும் விஜய்யின் தளபதி63 படத்தில் அவர் நடித்து வருகிறார். தளபதி63 படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என கூறப்படும் நிலையில் தற்போது நயன்தாராவின் கதாபாத்திரம் பற்றியும் ஒரு தகவல் கசிந்துள்ளது. படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்தின் பெயர் ‘ஏன்ஜெல்’ என்று படக்குழுவில் இருக்கும் ஒருவரே தெரிவித்துள்ளாராம். கால்பந்தாட்டம் தொடர்பான இந்த படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்திற்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கும் என்று கூறப்படுகிறது. Suggestions For You தளபதி 63 படத்தில் இணைந்த மேலும் ஒரு ஹீரோயின்!… தளபதி 63யின் நயன்தாரா லுக் – வைரலாகும் வீடிய… தளபதி 63யின் விஜய்யின் இரண்டு கதாபாத்திரங்கள் &#82… சூடுபிடிக்கும் தளபதி 63 பட வியாபாரம் – தமிழக……

Read More

தளபதி 63யில் கிரிக்கெட்… போட்டோவை பாருங்க புரியும்!

vijay and atlee

தெறி, மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் – அட்லி கூட்டணி அமைந்துள்ளது. விஜய்யின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘தளபதி 63 ’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஷூட்டிங்கிற்கு இடையே இயக்குனர் அட்லீ படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Suggestions For You சூடுபிடிக்கும் தளபதி 63 பட…

Read More

உறுதியானது தளபதி 64 கூட்டணி – புகைப்படத்துடன் வெளியான தகவல்!

நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 என அழைப்படும் பெயரிடப்படாதா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்து விஜய் மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் தளபதி 64 படக்குழுவினர் சில நாட்களுக்கு முன் தயாரிப்பாளரை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் பிரத்யேக புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதால் கிட்டத்தட்ட இந்த படம் அதிகாரபூர்வமாகி விட்டது. மேலும் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவுடன் விஜய் எடுத்து கொண்ட புகைப்படம் தற்சமயம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அனிருத்தும் உடை இருப்பதால் இப்படத்திற்கு இசையமைப்பாளர் இவர் தான் என உறுதியாகியுள்ளது. Suggestions For You ‘தளபதி 64’ படத்தின் கதைக்களம்…

Read More

உலக அளவில் ரஜினி, அஜித், விஜய் செய்த மாஸ் சாதனை – இவர்களுள் யார் முதலிடம்?

ரஜினிகாந்த், அஜித், விஜய் இவர்கள் தான் பாஸ் ஆபீஸ் மன்னர்கள். எந்த ஒரு சாதனையாக இருந்தாலும் இவர்களை தாண்டி தான் செய்யமுடியும். உலக அளவில் மார்க்கெட் வைத்திருக்கும் இவர்களின் படங்களுக்கு மிக பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்களுக்கு நாடு கடந்த உயர் நிலையிலான மார்க்கெட் உள்ளது. கபாலி, 2.0, பேட்ட படங்கள் பெரும் சாதனை செய்தன. விஜய்யின் மார்க்கெட்டும் உலகளவில் உயர்ந்து வருகிறது. மெர்சல், சர்கார் என படங்கள் சிறப்பான வசூல் சாதனை நிகழ்த்தியது. அதே போல அஜித்தின் சினிமா மார்க்கெட்டும் நல்ல முறையில் இருந்து வருகிறது. விஸ்வாசம் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர்கள் மூவரின் படங்கள் உலகளவில் முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸில் எவ்வளவு வசூலித்துள்ளது என பார்க்கலாம். ரஜினிகாந்த் : 2.0 : ரூ 110 கோடி –…

Read More

ஜெயலலிதா இல்லாத தைரியத்தில் தலைவா இரண்டாம் பாகம் உருவாகிறதா?

தளபதி விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்களை கொண்டவர். இவர் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தளபதி-63 பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இந்நிலையில் விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் தலைவா, இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார், பல பிரச்சனைகளை கடந்து தான் இப்படம் தமிழகத்தில் ரிலிஸானது. தலைவா தலைப்பின் கீழே Time to lead என்ற வார்த்தை போட்டதால் அப்போது இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அந்த படத்திற்கு நிறைய இடையூறு கொடுத்ததாக கூறப்பட்டது. அப்படி பல தடைகளை தாண்டி வந்தும் தோல்வியை சந்தித்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க விஜய் முடிவு செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி கசிந்து வருகின்றது, இப்படம் தோல்வி என்றாலும், விஜய் ரசிகர்களின் பேவரட் படம் என்பதால் கண்டிப்பாக இரண்டாம் பாகம் வந்தால் எதிர்ப்பார்ப்பு இருக்கும் என கூறப்படுகின்றது. ஜெயலலிதா இல்லாத…

Read More

தளபதி 63யின் விஜய்யின் இரண்டு கதாபாத்திரங்கள் – ஸ்பெஷல் அப்டேட் இதோ!

தெறி, மெர்சல் திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்- அட்லி கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும், கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் தற்போது விஜய் இப்படத்தில் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார் எனவும், ஒரே காட்சியில் அப்பா மகன் என இரு கதாபாத்திரங்களாக தோன்றுவார் எனவும் தகவல் கிடைத்துள்ளது. மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Suggestions For You தளபதி 63 படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் கசிந்த… சூடுபிடிக்கும் தளபதி…

Read More

தியேட்டர்கள் கொடுத்த அதிர்ச்சி – அஜித், விஜய் படங்களுக்கு ஆப்பு!

ajith-vijay

தமிழ் சினிமாவில் வியாபாரம் என்பது மிகவும் அதிகம். இப்பொது இருக்கும் பொருளாதார அடிப்படியில் நிறைய மாற்றங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. அப்படித்தான் இன்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஒரு புதிய விதிமுறையையே வெளியிட்டுள்ளது. இன்று திரையரங்க உரிமையாளர் சங்கமும் மல்டிபிளக்ஸ் அதிபர்கள் சங்கமும் இணைந்து ஒரு முடிவெடுத்து அதை விநியோகஸ்தர் சங்கத்திற்கு அனுப்பியுள்ளது. அது என்னவென்றார், இதுவரை படத்தை வெளியிடுகிற தியேட்டர்காரர்கள் வாங்கி வந்த சதவீதம் போதவில்லையாம். அதனால் ரஜினி, விஜய், அஜீத் படங்களுக்கு 60 முதல் 65 சதவீதம் வரை பங்கும், சூர்யா, ஜெயம் ரவி, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரின் படங்களுக்கு 55 முதல் 60 சதவீதம் வரை பங்கும் பிற நடிகர்களுக்கு ஐம்பது சதவீதம் வரையும் நிர்ணயித்திருக்கிறார்கள். Suggestions For You உலக அளவில் ரஜினி, அஜித், விஜய்…

Read More

சூடுபிடிக்கும் தளபதி 63 பட வியாபாரம் – தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா?

vijay

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்துவருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை AGS நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. தயாரிப்பு நிறுவனமும் படத்தின் வியாபாரத்தில் படு பிஸியாக உள்ளனர். விஜய்யின் மெர்சல் ரூ. 65 கோடிக்கும், சர்கார் ரூ. 80 கோடிக்கு மேலும் தமிழ்நாட்டில் விலைபோனது. இப்போது தளபதி 63 படத்தை இதற்கும் அதிகமாக வாங்க பலர் முன்வருகிறார்களாம். ஆரம்பமே ரூ. 70 கோடிக்கு மேல் தான் விஜய் படங்கள் பேசப்படுவதாக சினிமா வட்டாரங்களில் கூறுகின்றனர். Suggestions For You பிரம்மனாட தொகைக்கு விலைபோன தளபதி 63 சாட்டிலைட் உரி… தளபதி 63 படத்தில் ’63’ ஜெர்ஸியில் தோன்… துணை நடிகையிடம் தகாத வார்த்தையில் பேசிய அட்லீ &#82… தளபதி 63…

Read More

‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் விஜய்யின் கதாபாத்திரம் இது தான்! – மாஸ் தகவல்!

vijay

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 63வது படமான இதை AGS நிறுவனம் தயாரித்துவருகிறது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இப்படம் உருவாகிவருகிறது. இந்த படத்தை அடுத்து ‘மாநகரம்’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகியுள்ளது. கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்தில் விஜய், டான் வேடத்தில் நடிக்கிறாராம். சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த இரண்டு நடிகைகள் – தோல்வி எதிரொலி? இரண்டு டான்களுக்கிடையே நடக்கும் அதிரடிப்போர்தான் இந்த படமாம். விஜய் இதுவரை நடித்த ஆக்சன் படங்களில் இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. Suggestions For You உறுதியானது தளபதி 64 கூட்டணி – புகைப்படத்துடன… ‘தளபதி 64’ – விஜய்க்கு ஜோடியாக இ… விஜய்யின் 64வது படத்தை இயக்கப்போவது இந்த இளம் இயக்……

Read More