பொள்ளாச்சி சம்பவத்தை பரபரப்பு ஆக்கவேண்டாம் – எஸ்.வி.சேகர் அதிரடி பேட்டி!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமாா் ஆகிய நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கில் திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்ட நிலையில், அவா் தான் இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த பாலியல் சம்பவத்திற்கு ஆளும் கட்சி தொடர்பு இருப்பதாக திருநாவுக்கரசு கூறினார். இதனால் மேலும் இந்த பிரச்சனை வெடித்ததது. குற்றவாளிகள் யார்க இருந்தாலும் அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்று ஒரே குரலாக நாடு முழுவதும் ஒலிக்கிறது. இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான எஸ்.வி சேகர் எங்களுக்கு பிரத்யேக பேட்டி ஒன்று கொடுத்துள்ளார், இதில் பொள்ளாச்சி பாலியல் பிரச்னையை பரபரப்பு ஆக்கவேண்டாம், இதை வைத்து அரசியல் செய்து வாக்குகள் வாங்க நினைப்பது தவறு என்றும் கூறியுள்ளார். முழு பேட்டி இதோ… Suggestions For You பொதுமக்களிடம்…

Read More

பொதுமக்களிடம் மாட்டி கொண்ட பொள்ளாச்சி குற்றவாளிகள் – வீடியோ உள்ளே!

பொள்ளாச்சியில் பல நூறு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பெயரில் பொள்ளாச்சி காவல்துறை சிலரை கைதுசெய்துள்ளது. இந்த குற்றவாளிகளில் இரண்டு பேர் பொதுமக்களிடம் பிடிபட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்ததை இந்த குற்றவாளிகள் ஒப்புக்கொண்டுள்ள கொண்டுள்ளார்கள். இந்த விஷயத்தில் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. First video of one of the accused when Public got him first#PollachiSexualAbuse#ArrestPollachiRapists pic.twitter.com/U963KZibUV — Doly (@ssddoly) March 11, 2019 Suggestions For You பொள்ளாச்சி சம்பவத்தை பரபரப்பு ஆக்கவேண்டாம் –… அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸ்…

Read More