அஜித் என்ற வார்த்தைக்கு இதுதான் அர்த்தம்! டிக்ஷனரியிலேயே சேர்த்துவிட்டார்களா?

நடிகர் அஜித்திற்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் அவரது குணம் பற்றி பல பிரபலங்கள் பேசியும் நாம் கேட்டிருக்கிறோம். இந்நிலையில் அஜித் என்ற வார்த்தைக்கு ‘honest’ என அர்த்தம் என கூறி Urban Dictionary என்று இணையத்தளத்தில் சேர்த்துள்ளனர். இது பற்றிய ட்விட் அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. Suggestions For You அஜித்தை கலாய்த்த பிரபல மலையாள நடிகை – கடுப்ப… அஜித் வார்த்தையை மதிக்காத அவரது ரசிகர்கள் – … தியேட்டரை அதிரவைத்த அஜித் ரசிகர்கள் – ட்ரைலர… அஜித்தின் புதிய கெட் அப் – 60வது படத்திற்காக… தல 60 படம் குறித்து மரண மாஸ் அப்டேட்டை விட்ட தயாரி… உலக அளவில் ரஜினி, அஜித், விஜய் செய்த மாஸ் சாதனை &#… ‘நேர்கொண்ட பார்வை’ பற்றி பரவும் வதந்தி……

Read More

அஜித்தை கலாய்த்த பிரபல மலையாள நடிகை – கடுப்பான தல ரசிகர்கள்!

அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் சமூக வலைதள சண்டை நாளுக்கு நாள் மிக தீவிரமாகி வருகிறது. தினம்தோறும் ஒருவரை ஒருவர் மோசமாக குறிப்பிட்டு தேசிய அளவில் டேக் செய்து வருகின்றனர். இதற்கு எப்போது முடிவு கிடைக்கும் என்றுதான் பலரது கேள்வியும். இந்நிலையில் நேற்று வண்டு முருகன் அஜித் என வடிவேலுவின் கதாபாத்திரத்தை குறிப்பிட்டு ஒரு டேக், கைப்புள்ள விஜய் என மற்றொரு டேக் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆனது. வண்டு முருகன் அஜித் என ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டிருந்த ட்விட்டை பார்த்த ஒரு அடர் லவ் பட புகழ் நடிகை நூரின் ஷெரிப் ‘அவர் நலம்பெற பிரார்த்தனை செய்கிறேன்’ என கூறியுள்ளார். இதை பார்த்து கோபமான அஜித் ரசிகர்கள் அவரை ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர். Suggestions For You தியேட்டரை அதிரவைத்த அஜித் ரசிகர்கள் – ட்ரைலர……

Read More

அஜித் வார்த்தையை மதிக்காத அவரது ரசிகர்கள் – இப்படியா செய்வது?

தினம்தோறும் சமூக வலைத்தளங்களில் நடந்து வரும் ரசிகர்களின் சண்டை பற்றி நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலரில் அஜித் ஒரு வசனம் பேசியிருப்பார். ‘ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்றதுக்காக இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறீங்க’ என அஜித் பேசியிருப்பார். ஒரு நடிகரின் ரசிகர்கள் மற்ற நடிகர்களை அசிங்கப்படுத்தும் விதமாக இருக்கக்கூடாது என்பதை தான் அஜித் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்திருப்பார். ஆனால் அவர் சொன்னதையும் சில ரசிகர்கள் கேட்கும் நிலையில் இல்லை. நேற்று விஜய் பற்றி மிக மோசமாக தேசிய அளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர். #June22VijayDeathDay அவர்கள் ட்ரெண்ட் செய்துள்ளனர். நாளை மறுநாள் விஜய் பிறந்தநாள் வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் செய்துள்ள இந்த செயல் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. மறுபுறம் விஜய் ரசிகர்கள் #LongliveAjith என ட்ரெண்ட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. Suggestions For You உலக…

Read More

தியேட்டரை அதிரவைத்த அஜித் ரசிகர்கள் – ட்ரைலருகே இந்த நிலைமையா?

அஜித் தமிழ் சினிமாவில் மிக பெரிய மாஸ் நடிகர். இவர் படங்கள் வெளியாகும் அன்று தான் தீபாவளி போல காட்சியளிக்கும். தொடர்ந்து மாஸ் படங்களில் நடித்துவரும் இவர் சற்று வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் தான் ‘நேர்கொண்ட பார்வை’. அப்படமும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து செம்ம ஹிட் அடித்துள்ளது, இந்த ட்ரைலர் கொண்டாட்டம் பல திரையரங்குகளில் நடந்து வருகின்றது. அந்த வகையில் நாமக்கல் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் ட்ரைலருக்கு குவிந்த கூட்டத்தை பாருங்கள்… Suggestions For You ‘நேர்கொண்ட பார்வை’ பற்றி பரவும் வதந்தி… நேர்கொண்ட பார்வை படத்திற்காக வித்தியாசமான முயற்சிய… நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்திற்கு இப்படியொரு த… நேர்கொண்ட பார்வை டீஸர் ரிலீஸ் தேதி இதுவா? ரசிகர்கள… நேர்கொண்ட பார்வை படத்திற்கான வேற லெவெலில் பிளான் ச……

Read More

அஜித்தின் புதிய கெட் அப் – 60வது படத்திற்காக மாஸ் லுக்!

அஜித் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றி பெற்ற பிங்க் படத்தின் தமிழ் பதிப்பாக தயாராகி உள்ளது. இதில் வித்யாபாலன் ஜோடியாக வருகிறார். வினோத் இயக்கியுள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார். இந்நிலையில் அஜித்தின் அடுத்தப்படத்தையும் வினோத் தான் இயக்கவுள்ளாராம், இப்படத்தில் அஜித் புதிய கெட்டப்பில் தோன்றவுள்ளாராம். அதில் மீசை தாடி இல்லாமல் யங் கெட்டப் ஒன்று இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது, மேலும், புதிய ஹேர் ஸ்டைல் ஒன்றையும் இப்படத்திற்காக தல வைக்க உள்ளாராம். Suggestions For You தல 60 படம் குறித்து மரண மாஸ் அப்டேட்டை விட்ட தயாரி… சமூக பிரச்னையை பேசும் தல அஜித் – அடுத்த படத்… ஜிம்மில் ‘தல’ – அடுத்த படத்திற்க… முதலில் பிடிக்கவில்லை – அஜித்திடம் ஓகே வாங்க… ‘தல…

Read More

தல 60 படம் குறித்து மரண மாஸ் அப்டேட்டை விட்ட தயாரிப்பாளர் போனி கபூர்!

ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்படுபவர் அஜித். இவருக்கு நடிப்பதை தாண்டி பைக், கார் ரேஷ், சமையல், போட்டோ கிராபி என பல திறமைகளுக்கு சொந்தக்காரராவார். போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன் உள்ளிட்டோர் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை அடுத்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் நடிக்கிறார். அதையும் போனி கபூர் தான் தயாரிக்கவுள்ளார். தற்போது போனி கபூர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில், அஜித்திற்கு விளையாட்டு மற்றும் ரேஸிங்கில் ஆர்வம் இருப்பதை அரிந்து சந்தோஷப்பட்டேன், தல 60வது படமும் வேகத்தை மையப்படுத்திய ஒரு திரில்லர் படம் என்று கூறியுள்ளார். அஜித்தின் அடுத்த படத்தில் ரேஸ் குறித்த காட்சிகள் இருக்கும் என்பது தல ரசிகர்களின் எதிர்பார்ப்பாக…

Read More

உலக அளவில் ரஜினி, அஜித், விஜய் செய்த மாஸ் சாதனை – இவர்களுள் யார் முதலிடம்?

ரஜினிகாந்த், அஜித், விஜய் இவர்கள் தான் பாஸ் ஆபீஸ் மன்னர்கள். எந்த ஒரு சாதனையாக இருந்தாலும் இவர்களை தாண்டி தான் செய்யமுடியும். உலக அளவில் மார்க்கெட் வைத்திருக்கும் இவர்களின் படங்களுக்கு மிக பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்களுக்கு நாடு கடந்த உயர் நிலையிலான மார்க்கெட் உள்ளது. கபாலி, 2.0, பேட்ட படங்கள் பெரும் சாதனை செய்தன. விஜய்யின் மார்க்கெட்டும் உலகளவில் உயர்ந்து வருகிறது. மெர்சல், சர்கார் என படங்கள் சிறப்பான வசூல் சாதனை நிகழ்த்தியது. அதே போல அஜித்தின் சினிமா மார்க்கெட்டும் நல்ல முறையில் இருந்து வருகிறது. விஸ்வாசம் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர்கள் மூவரின் படங்கள் உலகளவில் முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸில் எவ்வளவு வசூலித்துள்ளது என பார்க்கலாம். ரஜினிகாந்த் : 2.0 : ரூ 110 கோடி –…

Read More

தல 60 படத்தின் வில்லன் நானா? – பிரபல நடிகர் விளக்கம்!

ajith

தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். அஜித்தின் 59வது படமான இதை போனி கபூர் தயாரித்துள்ளார். ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் அடுத்த படமான தல 60 படத்தையும் இயக்குனர் ஹெச். வினோத் தான் இயக்குகிறார், போனி கபூர் தான் தயாரிக்கிறார். இந்நிலையில் தல-60ல் நடிகர் SJ சூர்யா வில்லனாக நடிக்கிறார் என்றும் இதுதொடர்பாக SJ சூர்யாவை போனிகபூர் நேரில் சந்தித்ததாகவும் வதந்தி ஒன்று பெரியளவில் கூறப்பட்டு வந்தது. இதற்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிலளித்த SJ சூர்யா, இச்சந்திப்பு மான்ஸ்டர் படத்தின் வெற்றியை பாராட்டுவதற்காக மட்டுமே. எனது மான்ஸ்டர் திரைப்படத்தை பார்ப்பதற்கு போனி கபூர் ஆவலாக உள்ளார், நிச்சயம் அவருக்கு போட்டு காண்பிப்பேன் என்றார். Suggestions For You அஜித்தின் புதிய…

Read More

‘நேர்கொண்ட பார்வை’ பற்றி பரவும் வதந்தி – முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்!

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தை வினோத் இயக்குகிறார். அஜித் வழக்கறிஞராக நடித்துள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் இணைந்துள்ளார். ஷூட்டிங் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. ஆகஸ்ட் 10ம் தேதி படம் ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பிங்க் படத்தில் அமிதாப் பாடியது போல நேர்கொண்ட பார்வையில் தல அஜித் ஒரு மோட்டிவேஷன் பாடல் பாடுகிறார் என தொடர்ந்து செய்தி பரவி வந்தது. இது பற்றி யுவன் ஷங்கர் ராஜா ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். ‘அப்படி எந்த திட்டமும் இல்லை’ என அவர் பதில்அளித்துள்ளார். மேலும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் ரிலீஸ்…

Read More

நேர்கொண்ட பார்வை படத்திற்காக வித்தியாசமான முயற்சியில் இறங்கிய தல ரசிகர்கள்!

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தெரிகிறது. படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடக்கிறது, ஆனால் படக்குழுவினரிடம் இருந்து இன்னும் எந்த அப்டேட்டும் வரவில்லை. இது தல ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான். இதற்கு நடுவில் படத்திற்காக ஒரு வித்தியாசமான முயற்சியில் ரசிகர்கள் இறங்கியுள்ளனர். நேர்கொண்ட பார்வை படத்தை வரவேற்க ரசிகர்கள் தங்களது டுவிட்டர் பக்க பெயருக்கு மேல் NKP என்பதை பதிவு செய்து வருகின்றனர். படத்திற்காக இந்த வித்தியாசமான முயற்சியை தல ரசிகர்கள் ஆதரித்து அவர்களது பெயருக்கு மேல் NKP என மாற்றி வருகிறார்கள். Suggestions For You தியேட்டரை அதிரவைத்த அஜித் ரசிகர்கள் – ட்ரைலர… ‘நேர்கொண்ட பார்வை’ பற்றி பரவும் வதந்தி… நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்திற்கு இப்படியொரு த… நேர்கொண்ட பார்வை டீஸர் ரிலீஸ் தேதி இதுவா? ரசிகர்கள……

Read More