சூர்யா-ஹரி இணையும் அடுத்த படத்தின் தலைப்பு இதுவா?

1945ல் தொடங்கி பல பல பிரம்மாண்ட படங்களை கொடுத்த பழம்பெரும் தயாரிப்பு நிறுவனம் ஏ வி எம். கடந்த சில ஆண்டுகளாகவே பட தயாரிப்பில் இருந்து ஒதுங்கி இருக்கிறது. இந்நிலையில் மீண்டும் பட தயாரிப்பில் களமிறங்குகிறது.

கமர்ஷியல் படங்களுக்கு பெயர்போன இயக்குனர் ஹரி – சூர்யா கூட்டணி மீண்டும் இணையவுள்ளார்கள். இப்படத்தை ஏவிஎம்., நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்திற்கு யானை என தலைப்பு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சூர்யா – ஹரி கூட்டணி, அடுத்தப்படியாக சிங்கம் 4 படத்தில் இணைவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதை கைவிடப்பட்டு இந்த படத்தை தொடங்கவுள்ளதாக பேசப்படுகிறது.

Suggestions For You

Loading...