சூர்யாவின் NGK படக்குழு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழ் சினிமாவை வேறொரு கட்டத்திற்கு கொண்ட சென்ற இயக்குனர்களில் செல்வராகவன் முக்கியமானவர். இவர் தற்போது சூர்யாவை வைத்து “NGK” என்ற படத்தை எடுத்து வருகிறார்.

எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இன்று செல்வராகவனின் பிறந்த நாள் என்பதால் படக்குழு ரசிகர்களுக்காக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு விருந்தளித்துள்ளது. மேலும் அந்த போஸ்டரில் ஆடியோ கம்மிங் சூன் எனவும் குறிப்பிட்டுள்ளது.

சூர்யாவுடன் கூடிய இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் இந்த போஸ்டர் வெறித்தனமாக இருப்பதாக கூறி வருகின்றனர். இதோ..

Suggestions For You

Loading...