சூர்யா – சுதா படத்தின் கதை – வெளியான மாஸ் தகவல்!

Suriya

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்.ஜி.கே’ படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதை தொடர்ந்துசூர்யா கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை முடித்த பிறகு `இறுதிச்சுற்று’ பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.

இப்போது சூர்யா, சுதா கொங்காரா படத்தை பற்றி ஒரு தகவல் வந்துள்ளது. பிரபல தொழிலதிபரும் முன்னாள் ராணுவ அதிகாரியுமான ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தான் நடிக்க இருக்கிறாராம்.

படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரலில் இருந்து தொடங்க இருப்பதாகவும், ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.

Suggestions For You

Loading...