தமிழ்நாட்டில் மட்டும் NGK இத்தனை கோடி வசூலா? சூர்யாவின் ஆல் டைம் ரெக்கார்டு

suriya

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என்.ஜி.கே படம் நேற்று மிக பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. காலை 5.30 மணி முதல் பட ஷோக்கள்ஆரம்பித்துவிட்டது. ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்று ரசிகர்களே கூறிவிட்டனர்

அரசியல் களத்தில் செல்வராகவன், சூர்யா கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டியது. ஆனாலும் படத்திற்கான விமர்சனங்கள் கலவையாக தான் வந்து கொண்டிருக்கின்றன.

தற்போது இப்படம் தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் ரூ. 10 கோடி வசூலித்துள்ளதாம். இதில் சென்னையில் முதல் நாளில் ரூ. 1 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம். ரசிகர்கள் படத்தை புரிந்துகொண்டு வர வரும் நாட்களில் படத்தின் வசூலில் நல்ல மாற்றம் இருக்கும் என்கின்றனர்.

அதுமட்டும் இல்லாமல் தமிழகத்தில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த சூர்யா படங்களில் என்.ஜி.கே தான் முதலிடத்தில் உள்ளது.

Loading...