என்.ஜி.கே முதல் நாள் வசூல் – சூர்யாவின் பெஸ்ட் இது தான்!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என்.ஜி.கே படம் நேற்று மிக பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. காலை 5.30 மணி முதல் பட ஷோக்கள்ஆரம்பித்துவிட்டது. ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்று ரசிகர்களே கூறிவிட்டனர்

அரசியல் களத்தில் செல்வராகவன், சூர்யா கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டியது. ஆனாலும் படத்திற்கான விமர்சனங்கள் கலவையாக தான் வந்து கொண்டிருக்கின்றன.

தற்போது இப்படம் சென்னையில் முதல் நாளில் மட்டும் ரூ. 1.03 கோடி வசூலித்துள்ளதாம். முதல் நாளே ரூ. 1 கோடியை எட்டியுள்ள இப்படம் சென்னையில் அதிகம் வசூலித்த படங்களில் 10வது இடத்தை பிடித்துள்ளது.

மேலும் சென்னையில் அதிகம் வசூல் செய்த சூர்யா படங்களில் என்.ஜி.கே தான் முதலிடத்தில் உள்ளது.

Suggestions For You

Loading...