ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் சூர்யா, கார்த்தி? – செல்வரகவான் மாஸ்டர் பிளான்!

தமிழ் சினிமா மிகவும் கவனிக்க கூடிய ஒரு இயக்குனர் செல்வராகவன். இவர் படங்கள் முதலில் வரவேற்பு பெறவில்லை, ஆனால் ரசிகர்கள் அவரின் அருமையை காலங்கள் கடந்து தான் தெரிந்து கொண்டார்கள்.

அவர் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆனபோது எப்படிபட்ட வரவேற்பு பெற்றது என்பதை பார்த்தோம். இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து செல்வராகவன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில், முதல் பாகம் சரியாக வரவேற்பு பெறவில்லை என்ற போது வருத்தப்பட்டேன், ஆனால் மீண்டும் மக்கள் கொடுத்த ஆதரவு பார்த்து சந்தோஷமாக இருந்தது.

இரண்டாம் பாகம் இயக்க பெரிய ஆவலாக உள்ளது, நான் முயற்சி செய்வேன் ஆனால் நடக்க வேண்டும். கார்த்தி மற்றும் சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும் ஆனால் அதை அவர்களிடம் கேட்க வேண்டும். இது பெரிய படம், அப்படி மட்டும் நடந்தால் நன்றாக இருக்கும் என்றார்.

Loading...