முக்கிய நாளில் சூர்யாவுடன் மோதும் பிரபல நடிகர் – கடும் போட்டி!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் “NGK”. அரசியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் நாளை மறுநாள் வெளியிலாகவுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்குவரவுள்ளது.

அதே வேளையில் சூர்யா கே.வி.ஆனந்துடன் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். திரில்லர் படமாக உருவாகிவரும் இதில் சூர்யா போலீஸாக நடித்துவருகிறார்.

மலையாள சினிமாவின் பிரபல நடிகர் மோகன் லாலும் இதில் நடித்துள்ளார். இந்நிலையில் காப்பான் படம் வரும் ஆக்ஸ்ட் 15 ல் வெளியாகவுள்ளது. அதே நாளில் தான் பாகுபலி புகழ் பிரபாஸ் நடித்துள்ள சாஹோ படமும் வெளியாகவுள்ளதாம்.

சூர்யாவுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு உண்டு. அதே வேளையில் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான பிரபாஸின் படம் வருவதால் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதிலும் பாகுபலி பிறகு வெளியாகும் பிரபாஸ் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகும் சாஹோ படம் மிக பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருவது குறிபிடத்தக்கது.

Suggestions For You

Loading...