NGK டீசரை தெறிக்கவிட காத்திருக்கும் சூர்யா ரசிகர்கள் !

செல்வராகவன் இயக்கத்தி சூர்யா நடித்துள்ள NGK படத்தின் டீசர் வரும் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. Dream Warrior Pictures நிறுவனம் தயாரித்துள்ளது.

கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டநிலையில் சில காரணங்களால் இப்படம் வருகிற தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் என்று தெரிகிறது.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜ இசையமைத்துள்ளார்.

இதன் டீசருக்காக வெறித்தனமாக காத்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இன்ப செய்தியாக டீசருக்கான தனது டப்பிங் வேலைகளை சூர்யா முடித்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Suggestions For You

Loading...