துணை நடிகையிடம் தகாத வார்த்தையில் பேசிய அட்லீ – பரபரப்பு போலீஸ் புகார்!

atlee

ராஜா ராணி, தெறி, மெர்சல் பட இயக்குனர் அட்லீ தற்போது தளபதி விஜய் நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார். கால் பந்து விளையாட்டை மையமாக கொன்டு உருவாகிவரும் இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

நயன்தாரா நாயகியாக நடித்துவரும் இப்படத்தில் கதிர், யோகி பாபு, விவேக், இந்துஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தில் பணிபுரியும் துணை நடிகை கிருஷ்ணாதேவி அட்லீ மற்றும் உதவி இயக்குநர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், “ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் அட்லீயின் திரைப்படத்தில் வேலை பார்க்க வந்தேன். நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அட்லீயும் அவரது உதவியாளர்களும் என்னை தகாத வார்த்தைகள் பேசி வேலை பார்க்க விடாமல் வெளியே அனுப்பி விட்டார்கள். எனவே அட்லீ மற்றும் அவரது உதவியாளர்களை விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

Suggestions For You

Loading...