பெரிய எதிர்பார்ப்பில் இருந்த “சூப்பர் டீலக்ஸ்” படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆரண்ய காண்டம் பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். திருநங்கை கேரக்டரின் பெயர் ஷில்பா.

மேலும் இப்படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ பகத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு இன்று இரண்டாவது போஸ்ட்டரை வெளியிட்டுள்ளது.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம்
உலகம் முழுவது மார்ச் மாதம் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மேலும் இதன் ட்ரைலர் நாளை வெளியாகவுள்ளது என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Suggestions For You

Loading...