என்.ஜி.கே ரிலீஸுக்கு பிறகு சூர்யாவின் உருக்கமான பதிவு – ஃபீல் பண்ணும் ரசிகர்கள்!

suriya

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என்.ஜி.கே படம் இன்று மிக பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. அதன் வீடியோ விமர்சனம் பார்க்க கிளிக் செய்யுங்கள்.

காலை 5.30 மணி முதல் பட ஷோக்கள் ஆரம்பித்துள்ளது. ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்று ரசிகர்களே கூறிவிட்டனர் (NGK Public Opinion).

ஆனால் ஒரு சிலர் கொஞ்சம் கலவையான விமர்சனங்கள் கொடுக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது ஆதரவாக இருக்கும் ரசிகர்களுக்கு நன்றி என்று தமிழில் ஒரு பதிவு போட்டுள்ளார்.

ரசிகர்களும் என்.ஜி.கே பட ரிலீஸுக்கு உருக்கமான ட்வீட் ஒன்றை போட்டுள்ளார், ரசிகர்கள் அவரது டுவிட்டை ஷேர் செய்து வருகின்றனர்.

இந்த ட்வீட்டில் “அன்பே தவம். அன்பே வரம்..வெற்றி தோல்விகளைக் கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை தொடர்ந்து இயக்குகிறது. அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். உங்களுக்கும், இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் நன்றிகள்🙏” என கூறியுள்ளார்.

Loading...