பாகுபலி இயக்குனரின் அடுத்த படத்தின் இணைந்த பாலிவுட் பிரபலங்கள் – எகிறும் எதிர்பார்ப்பு!

பாகுபலி இரன்டு பாகங்களின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இந்தியாவின் முன்னணி இயக்குனர்கள் லிஸ்ட்டில் வந்துவிட்டார்.

இந்நிலையில் இவரின் அடுத்த படத்திற்கு மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ராஜமௌலி அடுத்ததாக இயக்கும் படத்தில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் இணைந்து நடிக்கிறார்கள்.

நாயகியாக பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஆலியா பட் ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் நடிகை ஆலியா பட் முதன் முறையாக அறிமுகமாகிறார்.

ஆலியா பட்டை தொடர்ந்து பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி, ஹாலிவுட் நடிகை டைசி எட்கர் ஜோன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதில் ராம் சரணுக்கு ஜோடியாக ஆலியா பட்-ம், ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை டைசியும் நடிக்கவுள்ளனர்.

Suggestions For You

Loading...