அஜித் ரசிகர்களுக்காக நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெறு ஒரு ஸ்பெஷல் !

விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். தீரன் இயக்குனர் வினோத் இயக்கும் இப்படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடிக்கிறாரகள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஹிந்தியில் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்கான இதில் வழக்கறிஞராக அஜித் நடிக்கிறார். ஆனால் வினோத் ரசிகர்களுக்காக சில விசயங்களை சேர்த்துள்ளாராம்.

இப்படத்தில் பாடலாசிரியர் பா.விஜய் பாடல்கள் எழுதுவதாக தகவல் வெளியானது. தற்போது புது ஸ்பெஷலாக அஜித், வித்யா பாலனுக்கும் இடையில் காதல் இருப்பது போல ஒரு பாடலை எழுதியுள்ளாராம்.

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் வேலைகளுக்காக துபாய் சென்றுள்ள யுவன் சென்னை வந்ததும் பா.விஜய் பாடலுக்கு இசையமைப்பாராம்.

Suggestions For You

Loading...