மீண்டும் செல்போனை தட்டிவிட்டு சிவகுமார் – இப்பொது யாருடைய தவறு?

தமிழ் சினிமாவில் எந்த சர்ச்சையில் சிக்காத ஒரே நடிகர் என்ற பெயரை வாங்கியவர் சிவகுமார். ஆன்மீகம், வரலாறு, ஓவியம், உடற்பயிற்சி என இப்படி பல விஷயங்களில் மக்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கக் கூடியவர்.

தமிழ் திரையுலகின் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படும் இவர் கடந்த வருடம் இவர் ஒரு நிகழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற ஒரு ரசிகனின் மொபைலை தட்டிவிட்ட சம்பவம் மூலம் முதல் சர்ச்சையில் சிக்கினார்.

பிறகு அந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டு அந்த ரசிகருக்கு புதிய மொபைல் ஒன்று வாங்கியும் கொடுத்தார்.

இப்போது அதேபோல் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்ற அவர் செல்பி எடுக்க வந்தவரின் மொபைலை தட்டிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவருக்கு பிடிக்காது என்று தெரிந்தும் அவரின் அனுமதியின்றி இப்படி புகைப்படம் எடுக்க முன்வருவது சரிதானா? என்று சிவகுமார் ஆதரவாளர்கள் கேட்டுவருகிறார்கள்.

Suggestions For You

Loading...