ரியல் ஹீரோ யார்? – சிவகார்த்திகேயன் vs விஜய் தேவரகொண்டாவை !

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார். அந்த லிஸ்டில் ஜே.ராஜேஷ் தயாரிக்க இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்க சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ என்ற படம் தயாராகிறது.

அதேவேளையில், காக்காமுட்டை மணிகண்டனின் இணை இயக்குநர் ஆனந்த் அண்ணாமலை விஜய் தேவரகொண்டாவை வைத்து இயக்கும் தெலுங்குப் படத்தின் தலைப்பும் ஹீரோ என்று வைத்துள்ளதாகச் செய்திகள் வந்தன.

மேலும், இந்தத் தலைப்பு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு தென்னிந்திய மொழிகளிலும் பதிவு செய்துள்ளதாகவும் படக்குழு குறிப்பிட்டிருந்தது.

இதனால் எந்த படத்திற்கு ஹீரோ என்ற தலைப்பு போகும் என்று குழப்பத்தில் இருந்தார்கள். தற்போது தமிழ் தயாரிப்பாளர் சங்கம் ஒரு யோசனை கூறியுள்ளது.

விஜய் தேவரகொண்டா படத்தை தமிழில் ரிலீஸ் செய்யும்போது ரியல் ஹீரோ என்று தலைப்பு வைத்துக்கொள்ளுங்கள் என்று யோசனை கூறியுள்ளது. இதை ஏற்பார்களா என்று பொறுத்திருந்து பாப்போம் !

Suggestions For You

Loading...