விக்னேஷ் சிவன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சென்சேஷனல் நடிகை!

நடிகர் சிவகார்த்திகேயன் வரிசையாக பிரபலமான இயக்குனர்களுடன் கமிட் ஆகிவருகிறார். மேலும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடனும் கைகோர்த்துவருகிறார்.

சன் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் பாண்டிராஜ் இயக்க சிவகார்த்திகேயன் ஹீரோவாக கமிட் ஆகியுள்ளார். அதை தொடர்ந்து லைகா தயாரிக்கும் படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. உறுதியான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் ரஷ்மிகா என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஏற்கனவே கார்த்தி ஜோடியாக ஒரு தமிழ் படத்தில் கமிட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Rashmika Mandanna

Suggestions For You

Loading...