எம்.ஜி.ஆர் பாடலை தனது அடுத்த பட தலைப்பாகிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர். லோக்கல் படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்.

கனா படத்தின் மூலம் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன், அடுத்ததாக சின்னத்திரை பிரபலம் ரியோ ராஜ் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தில் ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்திற்கு படக்குழு எம்.ஜி.ஆரின் ஹிட் பாடலான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்ற தலைப்பை வைத்துள்ளார்களாம்.

இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என கூறப்படுகிறது.

Suggestions For You

Loading...