சிவகார்த்திகேயன் படத்திற்கு எம் ஜி ஆர் பட தலைப்பு? கிடைக்குமா?

சன் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சிவகார்திகேயன் நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயனை மெரினா படத்தில் அறிமுக படுத்திய பாண்டிராஜ் இப்படத்தை இயக்கவுள்ளார்.

டி. இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் ஜோடியாக நடிக்கிறார். மேலும், சூரி, யோகி பாபு, நடராஜ், சமுத்திரக்கனி, இயக்குனர் பாரதிராஜா, ஆர்கே சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார்கள்.

இப்படத்திற்கு எங்க வீட்டு பிள்ளை என்று தலைப்பு வைக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம். எம் ஜி ஆர் பட தலைப்பான இது சிவகார்த்திகேயனுக்கு கிடைக்குமா என்பது தெரியவில்லை.

முன்னதாக விஜய் இந்த தலைப்பின் மீது ஆசைப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே!

Loading...