அருவி பட இயக்குனருடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது. இதில் சீமராஜா, மிஸ்டர் லோக்கல் படம் இவரது மார்க்கெட்டை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்றது.

இந்நிலையில் இவர் தனியாக தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார். இந்த தயாரிப்பில் இரண்டாவது படமான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தில் ஆடியோ வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், தன்னுடைய தயாரிப்பில் உருவாகும் 3-வது படத்தை அருவி பட இயக்குநர் அருண் பிரபு இயக்க இருப்பதாக அறிவித்தார். படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Suggestions For You

Loading...