மிஸ்டர் லோக்கல் படம் தள்ளிபோனதற்கு சீமராஜா தான் காரணமா?

Sivakarthikeyan-Nayanthara-in-Mr.-Local-Movie

சீமராஜா படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் “மிஸ்டர் லோக்கல்”. ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா நாயகியக நடித்துள்ளார்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாராவுடன் ராதிகா, யோகி பாபு, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மே 16ஆம் தேதி வரை தள்ளிப்போனது. தற்போது “மிஸ்டர் லோக்கல்” மே 16ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

மிஸ்டர் லோக்கல் படம் இரண்டுவாரங்கள் தள்ளிப்போவது ஏன்? சீமராஜா படம் வெளியானபோது ஏற்பட்ட பணப்பிரச்சனைக்காக சிவகார்த்திகேயன் கையெழுத்துபோட்டார்.

அந்த கடன் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருப்பதால் மிஸ்டர் லோக்கல் படம் வெளியாகும்போது பிரச்சனையாக உருவெடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாம்.

எனவே படம் வெளிவரும் முன்பே அதை சுமுகமாக பேசிமுடித்து, தன்னுடைய மிஸ்டர் லோக்கல் படத்துக்கு சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சிவகார்த்திகேயனிடம், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கட்அண்ட் ரைட்டாக சொல்லி இருக்கிறார்.

அதை எல்லாம் சரி செய்வதற்கு காலஅவகாசம் வேண்டும் என்று சிவகார்த்திகேயன் கேட்டுக்கொண்டதால் தான் மிஸ்டர் லோக்கல் படத்தின் ரிலீஸ் தேதியை மே 17 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாக விநியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Suggestions For You

Loading...