சிம்பு படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவகார்த்திகேயன்!

டிவி தொகுப்பாளியாக இருந்து சினிமாவில் ஹீரோவாக வெற்றி பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். அதை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளர்கவும் உயர்ந்துவிட்டார்.

சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக இவர், நெல்சனிடம் ஒரு உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார் என்று நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் கூறியுள்ளார்.

இயக்குனர் நெல்சன் “கோலமாவு கோகிலா” படத்தின் இயக்குனர், இதற்கு முன்பு இவர் சிம்புவை வைத்து “வேட்டை மன்னன்” என்ற படத்தை ஆரம்பித்தார் ஆனால் அப்படம் பாதியில் நின்றுபோனது.

“வேட்டை மன்னன்” படத்தில் தான் உதவி இயக்குனராக பணியாற்றினேன் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...