விஜய் சேதுபதியின் அடுத்த ரிலீஸ் – போஸ்டருடன் அறிவிப்பு!

“பண்ணையாரும் பத்மினியும்”, “சேதுபதி” ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்சேதுபதியுடன் இணைந்துள்ளார் இயக்குனர் அருண்குமார். இந்த படத்தில் அஞ்சலி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இப்படத்தை ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன் தயாரித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் தென் பகுதிகள் மற்றும் மலேசியாவிலும் நடைபெற்று முடிந்தது.

தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்த வருகிறது.விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி 16ம்தேதி வெளியானது. இந்நிலையில் சிந்துபாத் படத்தின் இரண்டாவது லுக் மற்றும் டிசர் ரிலீஸ் தேதி இன்று வெளியாகியுள்ளது.

டீசர் வரும் 11ஆம் தேதி வெளியாகும் என போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது.

Suggestions For You

Loading...