ஹேட்டர்ஸுகளுக்கு பதிலடி கொடுத்த பேங்காக் வரை பறக்கும் சிம்பு – என்ன திட்டம் தெரியுமா?

சர்ச்சை என்றால் அது சிம்பு என்று பெயராகிவிட்டது. சர்ச்சையில் சிக்கும்படியாக அடிக்கடி அவர் ஏதாவது ஒன்று சொல்லிவிட்டு பிறகு மன்னிப்பும் கேட்டுவிடுகிறார். இது அவருக்கு வாடிக்கையாகிவிட்டது

சமீபத்தில் வெளியான இவரது வந்தா ராஜாவாதான் வருவேன் படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. குறிப்பாக இவரின் உடல் எடை குறித்து ரசிகர்கள் கொஞ்சம் வருத்தப்பட்டனர்.

இந்நிலையில் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் படப்பிடிப்பு கொஞ்சம் தள்ளி போகியுள்ளது.

ஏனெனில் சிம்பு பேங்காக் சென்று தன் உடல் எடை முழுவதையும் குறைக்கவுள்ளாராம், அதோடு மார்ஷியல் ஆர்ட்ஸும் கற்று வரவுள்ளாராம்.

மேலும், சிம்புவின் உடல் எடை குறித்து சமீப காலமாக விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கவே இப்படி ஒரு முடிவாம்.

அதுக்கு பேங்காக் தான் போகணுமா?

Loading...