எத்தனை வாய் தான் உங்களுக்கு? – சிம்பு வெளியிட்ட வீடியோவை கிண்டல் செய்யும் ரசிகர்கள்!

சிறு வயதிலே சினிமாவிற்கு வந்தவர் நடிகர் சிம்பு. சிம்பு என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது, இதனால் சமீபகாலமாக படங்களும் இவருக்கு சரியாக போகவில்லை.

பிறகு மணி ரத்னத்தின் “செக்க சிவந்த வானம்” படம் இவருக்கு கைகொடுத்த பிறகு நிறைய படங்களில் கமி ஆகிவருகிறார். அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் “வந்தா ராஜாவைத்தான் வருவேன்” படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கு யாரும் பேனர், போஸ்டர், பால் அபிஷேகம் என எதுவும் செய்யக்கூடாது, உங்கள் அம்மா, அப்பாவிற்கு ஏதாவது செய்யுங்கள் என்றார்.

உடனே சிம்புவிற்கு வாழ்த்துக்கள் குவிந்தது. ஆனால், தற்போது பேனர் வையுங்கள், குடம் குடமாக பால் அபிஷேகம் செய்யுங்கள் என்று கூறி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் நிறைய பேர் எனக்கு ரசிகர்கள் இல்லை என்று கிண்டல் செய்துவருவதாக கூறியுள்ளார். மேலும் சிம்பு எனக்கு பெரிய பேனர் வையுங்கள், குடம் குடமாக பால் அபிஷேகம் செய்யுங்கள் என்று பேசியுள்ளார், இது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஒரு சிலர் அது வேற வாய், இது வேற வாய் என்று வீடியோ மீம் போட்டு கலாய்த்தும் வருகின்றனர்.

Loading...