பாலை காய்ச்சி ஊற்றுங்கள் என்று சொன்னேன் – அந்தர் பல்டிஅடித்த சிம்பு!

சிம்பு ஏதாவது ஒரு விடியோவை வெளியிட்டு சர்ச்சையில் வேண்டுமென்றே சிக்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அப்படிதான் அவர் நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் வரும் 1ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்திற்கு ‘கட்அவுட், பேனர் எல்லாம் வைக்க வேண்டாம்’ என வேண்டுகோள் விடுத்து சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதை அணைத்து மீடியாகளிலும் சிம்புவை பாராட்டி தான் செய்திகள் வெளியானது. ஆனால் யாரோ இவரை கமெண்ட்டில் கிண்டல் செய்தாக கூறி இவர் வேறுஒரு விடியோவை வெளியிட்டார்.

இதில் ‘இதுவரைக்கும் நீங்கள் வைக்காத அளவுக்கு எனக்கு பிளெக்ஸ் வையுங்கள், பேனர் வையுங்கள். கட்அவுட் வையுங்கள். பால் எல்லாம் பாக்கெட்டாக ஊற்றாதீர்கள். அண்டாவில் ஊற்றுங்கள்’ என ரசிகர்களுக்கு கட்டளையிட்டு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இதனால் இவரை கிண்டல் செய்தும் கண்டனம் தெரிவித்து பலர் பேசினார். இந்நிலையில் தற்போது சிம்பு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, அந்த வீடியோவில் எந்த இடத்திலாவது கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யுங்கள் என்று கூறியிருக்கறேனா? இல்லவே இல்லை. பாக்கெட் பாலை அண்டா அண்டாவாக ஊற்றுங்கள் என்று தான் கூறினேன். அப்படியென்றால் பாலை அண்டாவில் ஊற்றி … காய்ச்சி … வாய் உள்ள, உயிருள்ள ஜீவன்களுக்கு கொடுங்கள் என்பது தான் அர்த்தம் என்ற புது விளக்கத்தை கூறினார் சிம்பு. இருந்தாலும் நான் சொன்னது தப்புதான் என்றால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்றும் தடாலடியாக தெரிவித்தார்.

மேலும், நான் பால் எல்லாம் பாக்கெட்டாக ஊற்றாதீர்கள். அண்டாவில் ஊற்றுங்கள் என்று சொன்னேனே தவிர எனக்கு அபிஷேகம் செய்யுங்கள் என நான் சொல்லவில்லை. நான் மாற்றி மாற்றி பேசுகிறேன் என நினைக்கலாம் ஆனால் நான் யாரையும் மாத்தணும் என்று நினைக்கவில்லை. அனைவரும் மாற வேண்டும் என்று தான் நினைக்கிறன்” என்றார்.

Suggestions For You

Loading...