இதுக்கு தான் 90ml படத்தில் நடித்தேன் – சிம்பு விளக்கம்!

ஓவியா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 90 ml. ஆபாச வார்த்தைகள், பெண்கள் மது அருந்துவது, சீக்ரெட் அடிப்பது என சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. இப்படத்திற்கு சிம்பு தான் இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்கு மிகவும் மோசமான விமர்சனம் தான் கிடைத்தது. இப்படத்தில் நடித்ததால் ஓவியாவுக்கு எதிர்ப்புகளும் கிளம்பியது.

இந்நிலையில் 90ml படத்திற்கு இசையமைத்ததோடு கிளைமாக்ஸில் ஓவியவுடன் லிப்-லாக் காட்சியில் நடித்திருந்த சிம்பு இது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

“ஆண்களை இழிவுபடுத்தாமல் பெண் சுதந்திரத்தைப் பற்றி இக்கதையை எழுதியுள்ளார் அனிதா உதீப். அதற்காகவே இப்படத்தை ஒப்புக் கொண்டேன்,” என அவர் கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...